சென்னை: தமிழகத்தில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை, திருச்சி, சேலம், மதுரை, திருப்பூர், தேனி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று மாலையில் திடீரென ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பிராட்பேன்ட் இணைப்பும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்திற்கு புகார்கள் செய்யப்பட்டன. 2 மணி நேரத்துக்கும் மேலாக சேவை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரத்திற்குப் பிறகு இணைப்பு சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏர்டெல் சேவை பாதிப்பு
0