பெய்ஜிங்: சீனாவின் கிங்டோவில் இருந்து ஷாங்காய் நோக்கி உள்நாட்டு விமானமான ஷான்டாங் ஏர்லைன்ஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது விமானத்தில் திடீரென துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. மேலும் விமானத்தில் பயங்கர சத்தத்துடன் விமானம் குலுங்கியதாக கூறப்படுகின்றது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.
இதனை தொடர்ந்து பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடைமுறைகளின்படி நிலைமையை விமான ஊழியர்கள் கையாண்டனர். பின்னர் நான்ஜிங்கில் உள்ள ஒரு விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் பயணிகளை அனுப்பி வைப்பதற்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.