அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர்இந்தியா டீரீம்லைனர் விமானம் கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளானது. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதியதில் அதில் இருந்த மருத்துவ மாணவர்கள் 29 பேர், விமான பயணிகள் பணியாளர்கள் 241 பேர் என மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 220 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 202 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏர்இந்தியா விமான முன்பதிவு குறைந்துள்ளது. இது குறித்து இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் ரவி கோசைன் கூறுகையில், ‘‘அகமதாபாத்தில் ட்ரீம் லைனர் விமான விபத்தை தொடர்ந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கான முன்பதிவானது 20 சதவீதம் குறைந்துள்ளது. ” என்றார்.