சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்துள்ளது. இன்று தொடங்கி ஜூலை 3ம் தேதி வரையில் இதே நிலை நீடிக்கும். இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.
சென்னையில் சென்னையில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரையில் வெயில் இருக்கும். வங்க கடலில் ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால் ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யும்.