புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வீர் தாஸ், இசைக்கலைஞராகவும், ஸ்டான்ட்அப் நகைச்சுவை கலைஞராகவும் புகழ் பெற்றவர். இவரது மனைவி ஷிவானி மாத்தூர். இவர்கள் இருவரும் அண்மையில் மும்பையில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்துள்ளனர். இதற்காக இரண்டு இருக்கைகளுக்கு ரூ.50,00 பணம் செலுத்தி உள்ளனர். ஷிவானி மாத்தூரின் ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் சக்கர நாற்காலி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் சக்கர நாற்கலி தரவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து வீர் தாஸ் தன் எக்ஸ் பதிவில், “ என் மனைவி ஷிவானிக்கு கால் எலும்பு முறிவு குணமாகவில்லை. அதனால் நானும், என் மனைவியும் உதவியாளர் மற்றும் சக்கர நாற்காலியை முன்பதிவு செய்திருந்தோம். விமானம் இரண்டு மணி நேர தாமதமாக தரையிறங்கியயோது, சக்கர நாற்காலி தரப்படவில்லை. அதனால் எலும்பு முறிவுடன் என் மனைவி படிக்கட்டு வழியாக வௌியேறினாள். எங்களுக்கு உதவ உதவியாளர்களும் தரப்படவில்லை” என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.