சென்னை: உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஏர் ரைபிள் போட்டியில் தமிழ்நாட்டின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 252.5 புள்ளிகளை பெற்று இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார். 2019-ல் உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் தற்போது தங்கம் வென்றுள்ளார்.