டெல்லி: காற்றில் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் நீடிப்பதை தொடர்ந்து டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் 10-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி கொள்ளலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் புகை மூட்டமாக உள்ளது. இதனால் கட்டுமானம் சார்ந்த பணிகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. தொடர்ந்து bs-3 பெட்ரோல் bs-4 டீசல் வாகனங்கள் இயக்க கடும் கட்டுபாடுகள் விதிக்கபட்டுள்ளது. ஏற்கனவே தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கபட்டிருந்தது. மேலும் இந்த விடுமுறையானது நவம்பர் 10-ம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது.
இது தவிர 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வேண்டுமென்றால் பள்ளிகளுக்கு வரலாம், இல்லையெனில் ஆன்லை வகுப்புகள் நடத்தி கொள்ளலாம் என டெல்லி அரசு கூறியுள்ளது. தொடர்ந்து காற்றின் தரம் கண்காணிக்கபடுவதாகவும், அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.