புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 17ம் தேதி ஏர் இந்தியா விமானம் தலைநகர் டெல்லியில் இருந்து நியூயார்க் நோக்கி புறப்பட்டது. விமானத்தில் சென்ற பயணிக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பயணி இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வாடிக்கையாளரின் அனுபவம் குறித்து விமான நிறுவனம் கவலைஅடைகிறது. இது குறித்து கேட்டரிங் சேவை வழங்குனரிடம் விசாரிக்கப்படும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


