சென்னை: வட சென்னையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 4 பேருந்து நிறுத்தங்களை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதனை தொடர்ந்து மேலும் சில இடங்களில் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பேருந்து நிறுத்தங்களில், பயணிகளுக்கு ஏதுவாக குளிர்ச்சியான சூழ்நிலை கிடைக்கும் வகையில் உள்ளது.
மேலும், இந்த பேருந்து நிறுத்தத்தில் குளிரூட்டும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். நவீன வசதிகளான, இருக்கைகள், மொபைல் சார்ஜிங் பாயின்ட்கள் மற்றும் பிற வசதிகள் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், வட சென்னையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 4 பேருந்து நிறுத்தங்களை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியுள்ளது. பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் இந்த ஏசி பேருந்து நிறுத்தங்கள் அமைகின்றன.