மகாராஷ்டிரா, நாக்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனையில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1 Assistant Administrative Officer: 2 இடங்கள். வயது : 21 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி.
2 Store Keeper: 4 இடங்கள். வயது: 18 லிருந்து 35க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் மெட்டீரியல் மேனேஜ்மென்டில் முதுநிலை பட்டம்/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3 Executive Assistant (N.S): 4 இடங்கள். வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
4 Junior Engineer (A/c, & R): 1 இடம். வயது: 30க்குள். தகுதி: Electrical/Mechanical Engineering பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
5 Junior Engineer (Civil): 1 இடம். வயது: 30க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
6 Junior Engineer (Electrical): 1 இடம். வயது: 30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
7 optometrist: 2 இடங்கள். வயது: 21 லிருந்து 35க்குள். தகுதி: Ophthalmic Techniques பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
8 Technicians (Laboratory): 16 இடங்கள். வயது: 25 லிருந்து 35க்குள். தகுதி: மெடிக்கல் லேப் டெக்னாலஜி பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் அல்லது DMLT தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் அல்லது அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் OT Techniques ல் டிப்ளமோ தேர்ச்சியும் 8 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
9 Laundry Supervisor: 1 இடம். வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் லாண்டரி டெக்னாலஜியில் டிப்ளமோ சான்றிதழ் மற்றும் 2 வருட பணி அனுபவம்.
10Junior Administrative Assistant (LDC): 10 இடங்கள். வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள், இந்தி 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
11Medical Record Technicians: 2 இடங்கள். வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: மெடிக்கல் ரிக்கார்ட்ஸ் டெக்னீசியன் பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் அறிவுத் திறன் பெற்றவராகவும், நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள், இந்தி 30 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.12Stenographer: 4 இடங்கள். வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்தில் எழுதி, அதை 50 நிமிடங்களில் ஆங்கிலத்தில் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
எய்ம்ஸால் நடத்தப்படும் சிபிடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ₹1000/-. எஸ்சி/எஸ்டி ₹800/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
www.aiimsnagpur.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.10.2023.