சென்னை: கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக பணம் கேட்டு அழைப்புகள் வந்தால் போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. அறிவுறுத்தியுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு, பணம் கொடுத்தால், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அங்கீகாரம் பெற்று தருவதாக, ஏ.ஐ.சி.டி.இ அதிகாரிகள் பேரில் போலியான அழைப்புகள் வருவதாக புகார் எழுந்துள்ளன. எந்த ஒரு ஏ.ஐ.சி.டி.இ அதிகாரிகளும், பல்கலைக்கழங்கள், கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க எந்தவித நிபந்தனையும் விதிப்பதில்லை. இதுபோன்ற போலியான அழைப்புகள் வந்தால், பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.