மதுரை: அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செல்லும் என ஐகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. விண்ணப்பங்கள் முறையாக முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. எழுத்துத் தேர்வு முடிந்ததும் தேர்வு முடிவுகளை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். நியமனம் செய்ய வேண்டியவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆவணங்களை திருத்தியது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என நீதிபதிகள் சுந்தர், பரத சக்ரவர்த்தி தெரிவித்தனர். முறைகேடான நியமனங்களை ரத்து செய்து அதற்கு காரணமான அலுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.