Friday, September 22, 2023
Home » மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி: எடப்பாடி அறிக்கை

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி: எடப்பாடி அறிக்கை

by Karthik Yash

சென்னை: மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரையில் நேற்று முன்தினம் (20ம் தேதி) நடந்த மாநாடு வெற்றி அடைந்திருக்கிறது என்பதை, பொதுச்செயலாளர் என்கிற முறையில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுகவில் தொன்றுதொட்டு வந்த லட்சோப லட்சம் தொண்டர்கள் மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி இருக்கிறார்கள். ஜெயலலிதா கூறியதுபோல், அதிமுக இன்னும் பல நூறு ஆண்டு காலம் மக்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றும் என்கிற உறுதியை மாநாடு பறைசாற்றி இருக்கிறது. இந்த வெற்றி, 2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான வெற்றிக்கும்; அதனை தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான அடித்தளமாக அமைந்துள்ளன. அதிமுக மாநாட்டில், எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் நம் இயக்கம் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்? அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களின் பேராதரவோடு, அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நடத்திய முதல் மாநாட்டிற்கு, என்னுடைய அன்பான அழைப்பினை ஏற்று குடும்பம் குடும்பமாக, குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அனைத்து இடையூறுகளையும் தாண்டி மாநாட்டிற்கு வந்து கலந்துகொண்டு கொள்கை முழக்கமிட்ட நிர்வாகிகளுக்கும், அதிமுக உடன்பிறப்புகளுக்கும் இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்திட்ட, தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எல்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?