மதுரை: அதிமுக மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா? அல்லது தடை விதிக்கப்படுமா? என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை செய்யப்படுகிறது. அதிமுக மாநாடு விமான நிலையம் அருகில் நடப்பதால் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியும் வழக்கு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.