பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளரை ஆதரித்து, நடிகர் செந்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். இதில், பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடிகர் செந்தில் பிரசாரம் செய்யும்போது, அதிமுகவையும், எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரசாரத்தில் நடிகர் செந்தில் பேசும்போது, ‘அண்ணாமலைதான் கூட போய் எடப்பாடிக்கு என்ன தேவையோ அதை எல்லாம் செய்து கொடுத்தார். அந்த நன்றிய எடப்பாடி மறந்துட்டாரு. எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் அதிமுகவை டைட்டானிக் கப்பலாக வச்சிருந்தாங்கயா. ஆனால், அந்த கப்பலை ஓட்ட தெரியாமல் ஓட்டி உடைச்சிட்டாங்க. இத்துடன் இந்த தேர்தலில் எடப்பாடியையும் முடிச்சிடுங்க. மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டிய நேரம் இது’ என்று கூறினார். நடிகர் செந்திலின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.