காரைக்குடி: காரைக்குடியை சேர்ந்தவர் பழனிமுருகன். மீன் வியாபாரி. அதிமுக முன்னாள் வட்ட செயலாளர். இவர், நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டில் அவரது மனைவி, மகன் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை வீட்டின் முன்புறம் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில், வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. தகவலறிந்து காரைக்குடி வடக்கு போலீசார் வந்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.