கரூர்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே முறப்பாடு கோயில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், கடந்த 25ம்தேதி அவரது அலுவலகத்திலேயே வெட்டி கொலை செய்யப்பட்டார். ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த சிலர், அவரை கொன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கார்த்திக் (37), அரசு, முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக்கை நேற்று கைது செய்தனர்.