சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கோவை மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தா.மலரவன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எம்ஜிஆர், ஜெயலலிதா பேரன்பை பெற்றிருந்தவரும், அதிமுக மீதும், தலைமையின் மீதும், மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்தவருமான மலரவன், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு, கோவை மாநகராட்சி மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றியவர். அன்புச்சகோதரர் மலரவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்
181
previous post