Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக மாஜி அமைச்சர் கார் மீது கட்சியினர் கார்கள் மோதல்

மொடக்குறிச்சி: சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தம்பதி கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் விளக்கேத்தியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க அதிமுக மாஜி அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான ராமலிங்கம் மற்றும் அதிமுகவினர் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் சென்று கொண்டிருந்தனர். பாரப்பாளையம் அருகே முன்னாள் சென்ற ராமலிங்கத்தின் கார் திடீரென பிரேக் போட்டு நின்றதால் பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், பத்துக்கும் மேற்பட்ட காரின் முன் பகுதி மற்றும் பின்பகுதி, கண்ணாடிகள் உடைந்து சேதமானது. இதனால், அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சென்று விபத்துக்குள்ளான கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.