Tuesday, September 26, 2023
Home » அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு குறித்து கவர்னர் மாளிகைக்கு கடிதம் ஒப்புகை சீட்டை வெளியிட்டு ஆதாரம் காட்டியது தமிழ்நாடு அரசு

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு குறித்து கவர்னர் மாளிகைக்கு கடிதம் ஒப்புகை சீட்டை வெளியிட்டு ஆதாரம் காட்டியது தமிழ்நாடு அரசு

by Karthik Yash

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார் தொடர்பாக மாநில அரசிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என கவர்னர் கூறியிருந்தார். ஆனால் தமிழக அரசு அனுப்பியிருந்த கடிதத்தை கவர்னர் மாளிகை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சீட்டை அரசு வெளியிட்டு ஆதாரம் காட்டியுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கே.சி.வீரமணி உள்ளிட்டோர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், தமிழக கவர்னர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்து கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ‘‘ஒரு சில வழக்குகளுக்கு சட்ட விளக்கம் கேட்டு இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான கோப்புகள் எதுவும் எனக்கு வரவில்லை’’ எனவும் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் கவர்னருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டை தமிழக அரசு நேற்று வெளிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் 15ம் தேதி ஆளுநரின் செயலாளர், கடிதத்தை பெற்றுக்கொண்டு ஒப்புகை அளித்த விவரம், அத்துடன் கடந்த 2022 செப்டம்பர் மாதம் 12ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. “கோப்புகளை பெற்றுக்கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டுவிட்டு அறிக்கை ஏதும் கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல” என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?