சென்னை: அதிமுக அவசர செயற்குழு கூட்டம் ஆக.16-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூடுகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஆக.16-ம் தேதி காலை 9.30 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் செயற்குழு கூட உள்ளது