திருச்சி: எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகியை போலீசார் நேற்று கைது செய்தனர். திருச்சி மாநகராட்சியை கண்டித்து மரக்கடை எம்ஜிஆர் திடலில் அதிமுக சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது காந்திமார்க்கெட் அதிமுக பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா, திமுக எம்பி கனிமொழி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் குறித்து அவதூறாக, அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சித்து பேசியுள்ளார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைத்தல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சுரேஷ் குப்தாவை கைது செய்தனர்.