Sunday, February 25, 2024
Home » அதிமுக பைத்தியங்களுக்காகதான் அண்ணாமலை லேகியம் விற்கிறார்: ஆர்.பி.உதயகுமாருக்கு கே.பி.ராமலிங்கம் பதிலடி

அதிமுக பைத்தியங்களுக்காகதான் அண்ணாமலை லேகியம் விற்கிறார்: ஆர்.பி.உதயகுமாருக்கு கே.பி.ராமலிங்கம் பதிலடி

by Karthik Yash

சேலம் மாநகர் மாவட்ட பாஜ சார்பில் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பட்டியில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை திறந்து வைத்த மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 11ம் தேதி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார். அவர், சென்னையில் கட்சி தேர்தல் பணிக்குழுவினர், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிக்கிறார். பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசவுள்ளார். வரும் 25ம் தேதி பிரதமர் மோடி பல்லடம் வருகிறார். அங்கு அண்ணாமலையின் யாத்திரை நிறைவுவிழா நடக்கிறது. தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதால் பாஜ கூட்டணியில் இருந்து விலகியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்லியிருந்தால், அவர் ஏற்கனவே கூறியதை திரும்பிப் பார்க்க வேண்டும்.

முதல்வராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் ஒன்றிய அரசு என்னவெல்லாம் செய்துள்ளது என்பதை அவரே பட்டியலிட்டுள்ளார். அதுவும் அவர் முதல்வராக இருந்தபோது, என்னென்ன திட்டங்களுக்கு நிதியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என்பதையும், அதிகளவு மக்களுக்கு செய்துள்ளோம் என்பதையும் கூறியிருக்கிறார். அதனால் அதற்கு பதில் சொல்லத் தேவையில்லை. பாஜவால் எடப்பாடி பழனிசாமி பயன் பெற்றுள்ளார். தற்போது தேர்தலில் ஏதோ ஒரு காரணத்திற்காக பேசுகிறார். அவரை போல் லாவண்ய கச்சேரி நடத்த தேவையில்லை.

பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து லேகியம் விற்பவர் என ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பது பற்றி கேட்கிறீர்கள். லேகியம் எதுக்கு விற்பார்கள். அடுத்தவனுக்கு பைத்தியம் பிடித்திருந்தால், வேறு ஏதாவது நோய் இருந்தால் லேகியத்திற்கு வருவார்கள். உடல்நிலை சரியில்லையென்றால்தான் லேகியம் தேவை. ஆக வைத்தியம் செய்வதற்காக எங்கள் தலைவர் அண்ணாமலை லேகியம் விற்பவர்தான். ஊழலை தீர்க்க, இதுவரை ஆட்சியில் இருந்தவர்களுக்கு நோய் தீர, அடுத்து நல்லாட்சி அமைய லேகியம் விற்பனை செய்கிறார். இவ்வாறு கே.பி.ராமலிங்கம் கூறினார்.

You may also like

Leave a Comment

twenty − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi