அரக்கோணம்: அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரக்கோணம் எம்எல்ஏ ரவி இல்லத் திருமணவிழாவில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்; தமிழகத்தில் தற்போது அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
நீட் தேர்வு மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மூலம் 3,460 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகள், மேம்பாலங்கள் கொண்டுவரப்பட்டன. அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. மக்கள் பிரச்சனைகளை தீர்க்க அதிமுகவில் மட்டும் தான் முடியும் என்றும் கூறினார்.