Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

அதிமுக ஆட்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான கொடூரம்; தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்: துணை முதல்வர் உதயநிதி பதிவு

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது நடந்த பெண்களுக்கு எதிரான பொள்ளாச்சி வன்கொடுமை கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

‘‘இப்போது நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்த கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்.

குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.