சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை: ‘மா’ விவசாயிகள் பிரச்னைகளை போக்கமுத்தரப்பு பேச்சுவார்த்தை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நாடகமாடப்படுகிறதே தவிர, எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ‘மா’ பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக தீர்த்துவைக்க தமிழக அரசை வலியுறுத்தி வரும் 20ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் கட்சியினர் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.