திண்டுக்கல்: அதிமுக நிர்வாகியான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கண்ணன் முறைகேடாக ஒதுக்கிய ரூ.3.5 கோடி டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளரான கண்ணன் நத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவராக உள்ளார். நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.5 கோடி வளர்ச்சி பணிகளுக்கான டெண்டரை கண்ணன் தன்னிச்சையாக ஒதுக்கியதாக புகார் எழுந்தது. ஊராட்சி ஒன்றிய மன்ற கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக கண்ணன் டெண்டரை ஒதுக்கியதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. ரூ.3.5 கோடி டெண்டரில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள டெண்டரை தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய ஊராட்சி ஒன்றிய தலைவர் கண்ணன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் ஆவார். முறைகேடு புகாரை அடுத்து கண்ணன் ஒதுக்கீடு செய்த ரூ.3.5 கோடி டெண்டரை ரத்து செய்து திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டார்.