சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வின்சென்ட் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977-1980ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வின்சென்ட். முன்னாள் அமைச்சராகவும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த வின்சென்ட், வின்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராக உள்ளார். அறக்கட்டளை சார்பில் வில்லுக்குறியில் இயங்கும் பொறியியல் கல்லூரிக்காக உரிய அனுமதியின்றி 3 மாடி கட்டிடத்தை கட்டியதாக புகார் எழுந்தது. அறக்கட்டளை சார்பில் வில்லுக்குறியில் இயங்கும் பொறியியல் கல்லூரிக்காக உரிய அனுமதியின்றி 3 மாடி கட்டிடத்தை கட்டியதாக புகார்தெரிவிக்கப்பட்டது. கட்டடம் கட்ட நெல்லை நகரமைப்பு துறை உதவி இயக்குநர் நாகராஜன் உடந்தையாக செயல்பட்டுள்ளதாக ஜஸ்டின் என்பவர் புகார் தெரிவித்தார். ஜஸ்டின் அளித்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2022-ல் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வின்சென்ட் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் வின்சென்ட் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..!!
previous post