சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்கில் குற்ற நடவடிக்கைக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ஜி.பாஸ்கரன் மீது வழக்கு தொடரவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். விஜயபாஸ்கர், ரமணா வழக்கில் ஆளுநர் ஒப்புதல் அளித்ததன் மூலம் சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.