விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கின்ற கட்சி(அதிமுக) இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பயந்துகொண்டு ஒதுங்கி விட்டார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை. தேஜ கூட்டணியில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படத்தை போட்டு போஸ்டர், பேனர் வைத்து பிரசாரம் செய்ய பாமகவுக்கு உரிமையுள்ளது.ஜெயலலிதா, எம்ஜிஆர் புகைப்படத்தை போட்டு பிரசாரம் மேற்கொள்ள ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள் தான் டிடிவி, ஓபிஎஸ். நாங்கள் பாமகவிற்கு துணையாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு
115