சென்னை: அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என வி.பி.துரைசாமி கூறியது அவரது கருத்து.அதிமுகவில் 2 கோடி தொண்டர்கள் இருப்பதால் 2 கோடி கருத்துகள் கூட வரலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மணி நேரம் பேசிய அண்ணாமலை, செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார். உடல்நிலை பாதிப்பு காரணமாக செய்தியாளர்களை அண்ணாமலை சந்திக்கவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார்.