அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஏர் இந்தியா அறிவித்த ரூ.1 கோடி இழப்பீடை பெறும் செயல்முறை கடுமையாக இருப்பதாக பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். விண்ணப்பம் முழுமையாக இல்லையெனில் இழப்பீடு இல்லை என மிரட்டப்படுவதாகவும், பல்வேறு நிபந்தனைகளை விதித்து இழப்பீடு தொகையை குறைக்க முயல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.