சென்னை: அகமதாபாத் விமான விபத்து மிகவும் வருத்தம் அளிக்கிறது என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2, திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு புறப்பட்டு சென்றார். அப்போது ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெய்லர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு தான் தற்போது நான் பெங்களூரு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறேன். கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்கில் வெளியாகும். அகமதாபாத் விமான விபத்து மிகவும் வருத்தமாக உள்ளது. ஆண்டவன் அருளால் இனி இது போன்ற எந்த ஒரு அசம்பாவிதங்களும் இனிமேல் யாருக்கும் ஏற்படக்கூடாது என்று, நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இனி யாருக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது அகமதாபாத் விமான விபத்து மிகவும் வருத்தம் அளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
0