அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 260ஆக குறைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று அருகில் இருந்த மருத்துவக்கல்லூரி மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த ரமேஷ் என்பவர் மட்டும் உயிர் தப்பினார். 241 பேர் பலியானார்கள். மேலும் விமானம் கீழே விழுந்ததில் பலர் பலியானார்கள். அதோடு சேர்த்து இந்த விமான விபத்தில் மொத்தம் 275 பேர் பலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது அந்த எண்ணிக்கை 260ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை அடையாளம் காணப்படாத கடைசி உடலும் நேற்று டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் கண்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டது. பலியான 260 பேரில் 200 பேர் இந்தியர்கள். இந்த 200 பேரில் 181 பேர் விமான பயணிகள். 19 பேர் விமானம் கீழே விழுந்ததில் பலியானவர்கள். 7 பேர் போர்ச்சுகீசிய நாட்டினர். 52 பேர் பிரிட்டிஷார். ஒருவர் கனடாவை சேர்ந்தவர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.