Saturday, July 12, 2025
Home செய்திகள்Banner News 14 ஆண்டுகளுக்கு பின் டேக் ஆஃபின் போது விமான விபத்து… 170 பேர் உயிரிழப்பு; விசாரணை தொடக்கம்; அகமதாபாத்தில் மீட்புப் பணி தீவிரம்!!

14 ஆண்டுகளுக்கு பின் டேக் ஆஃபின் போது விமான விபத்து… 170 பேர் உயிரிழப்பு; விசாரணை தொடக்கம்; அகமதாபாத்தில் மீட்புப் பணி தீவிரம்!!

by Porselvi

அகமதாபாத் : ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை தொடங்கியது. விமானங்கள் விபத்து குறித்து விசாரிக்கும் புலனாய்வுப் பிரிவு தனது குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.

*12 ஊழியர்கள் உள்பட 242 பயணிகளுடன் ஏர் இந்தியாவின் A1171 வகை பயணிகள் விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பகல் 1.17 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து மேகானி நகர் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

*14 ஆண்டுகளுக்கு பின் டேக் ஆஃபின் போது இந்தியாவில் விமானம் விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

*ஏர் இந்தியா விமானம் AI171 ஒரு பேரழிவான விபத்தில் சிக்கியது என்றும் மேலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் பகிரப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

*169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகல், கனடாவைச் சேர்ந்த ஒருவர் விமானத்தில் பயணித்துள்ளனர். விமானத்தில் பயணித்தவர்கள் பெரும்பாலானவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். 11 சிறார்கள், 2 குழந்தைகளும் விமானத்தில் இருந்துள்ளனர்.

*அனுபவம் வாய்ந்த 2 விமானிகள், 10 பணியாளர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். விமானி சுமீத் சபர்வால் சுமார் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.

*விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளார் விமானி. கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தொடர்பு கொண்டு விமானம் ஆபத்தில் இருப்பதை குறிக்கும் வகையில் “மே டே” என அவசர தகவல் அனுப்பினார்.

*விமான விபத்தில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி படுகாயம் அடைந்துள்ளார்.

*ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து அகமதாபாத்தில் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பணிகளையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது. விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

*அகமதாபாத் விமான விபத்தை அடுத்து பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது. 011-2461 0843 மற்றும் 96503 91859 என்ற அவசர எண்களை தொடர்பு கொள்ளலாம்.

*விமான விபத்து தொடர்பாக 1800 5691 444 என்ற அவசர எண்ணை அறிவித்தது ஏர்இந்தியா. அதே போல், 020 7008 5000 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது பிரிட்டன் அரசு.

*அகமதாபாத்தில் விமான விபத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் DP-ஐ கருப்பு நிறத்திற்கு மாற்றியது ஏர் இந்தியா நிறுவனம்

*உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோர் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

*விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மதிய உணவு நேரத்தில் மருத்துவ மாணவர்கள் கூடியிருந்தபோது விடுதி மீது விமானம் விழுந்துள்ளது.

*சென்னையில் இருந்து அகமதாபாத், அகமதாபாத்தில் இருந்து சென்னை வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

*அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து இண்டிகோ விமானம் சென்னை திருப்பி விடப்பட்டது. சென்னையில் இருந்து அகமதாபாத் சென்ற இண்டிகோ விமானம் பாதி வழியிலேயே திருப்பி விடப்பட்டது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi