பணியிடங்கள் விவரம்:
1. சீனியர் சயின்டிஸ்ட்: 1 இடம். சம்பளம்: ரூ.1,31,400- 2,17,100. தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.ஹெச்டி முடித்திருப்பதோடு 8 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 47க்குள்.
2. புரோகிராம் அசிஸ்டென்ட்: 1 இடம். சம்பளம்: ரூ.35,400- 1,12,400. தகுதி: வேளாண்மை அல்லது வேளாண்மைக்கு தொடர்புடைய ஏதேனும் அறிவியல் அல்லது சமூக அறிவியலில் பட்டம். வயது: 30க்குள்.
3. ஸ்டெனோகிராபர்: 1 இடம்.
சம்பளம்: ரூ.5,200-20,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களிலும் அல்லது இந்தியில் 65 நிமிடங்களிலும் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது: 27க்குள்.
4. டிரைவர்: 1 இடம். தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து ஓட்டுநர் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.shuats.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.06.2025.