Friday, February 23, 2024
Home » அக்னிவீர் திட்டத்தின் கீழ் விமானப்படையில் 3500 வீரர்கள்

அக்னிவீர் திட்டத்தின் கீழ் விமானப்படையில் 3500 வீரர்கள்

by Porselvi

பணி: AGNIVEER (Agniveer Vayu Intake 01/2025): சம்பளம்: முதல் வருடம்: ரூ. 30 ஆயிரம், 2ம் வருடம் ரூ. 33 ஆயிரம், 3ம் வருடம் ரூ. 36,500, 4ம் வருடம் ரூ. 40 ஆயிரம்.

வயது வரம்பு: 17 முதல் 21க்குள் இருக்க வேண்டும். அதாவது 2.1.2004க்கும், 2.7.2007க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி: கணிதம் அல்லது கணிதம் மற்றும் இயற்பியலை பாடமாகக் கொண்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanical/Electrical/Electronics/Automobile/Computer Science/IT/ Instrumentation Technology ஆகிய ஏதாவதொரு பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள் 152.5 செ.மீ., உயரமும், பெண்கள் 152 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். ஆண்கள் மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ. 550/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
இந்திய விமானப்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் உடற்திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். உடற்திறன் தேர்வில் ஆண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடித்தல், பெண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடித்தல் ஆகிய போட்டிகளும் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் புஷ்அப், சிட்அப், ஸ்குவாட் பயிற்சிகளை செய்தல் ஆகிய போட்டிகளும் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு 6 மாத அடிப்படை ராணுவ பயிற்சிக்குப் பின்னர் பணி வழங்கப்படும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மார்ச் 17ம் தேதி நடைபெறும்.

www.agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.2.2024.

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi