சென்னை: ஆக்கிரமிப்புகளில் இருந்து மறுகுடியமர்த்தப்படும் குடும்பத்தினர் குழந்தைகள் கல்விபெற தேவை நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது. நகர்ப்புற பாதிக்கப்பட்டோர் தகவல் மற்றும் ஆதார மையம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் கல்வி பெற தேவையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறுகுடியமர்த்தப்படும் குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி பெறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என மனுதாரர் கேட்டுக் கொண்டிருந்தார்.