காதலுக்கு வயது ஒரு தடையே இல்லை. உண்மையான காதல் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படும் . அப்படித்தான் ஃபுளோரிடா மாகாணத்தின் தம்பாநகரைச் சேர்ந்த மருத்துவர் தாமஸ் என்பவர் தனது மேல்நிலைப் பள்ளியில் பார்த்து மனதுக்குள் விரும்பிய பெண்ணான நான்சியிடம் தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். 60 வயதான நான்சியை தம்பா விமானநிலையத்தில் கண்டு, அவர் முன் மண்டியிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு புரபோஸ் செய்திருக்கிறார் தாமஸ். பூங்கொத்துகளை கொடுத்து ‘என் தோழி, காதலி, பார்ட்னர் என என் வாழ்வின் அனைத்துமாக என்னுடன் நீ இருக்க வேண்டும். மீதியிருக்கும் என் வாழ்நாட்களை உன்னுடன் கழிக்க விரும்புகிறேன். என்னைத் திருமணம் செய்துகொள்ள சம்மதமா?’ என தாமஸ் கேட்க, வெட்கம் தாளாமல் நான்சி சம்மதம் தெரிவிக்கும் இந்த வீடியோதான் இணையத்தில் தற்போது வைரல்.