ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர். சர்-இ-புல் மாகாணத்தில், மலைப்பாங்கான பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 9 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.