சென்னை: ஒன்றிய அரசு தர மறுக்கும் நிதியை பெற சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வி நிதி என்ற ஒன்றிய கல்வி அமைச்சரின் பேட்டி தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகளிடம் விவரங்களை துணை முதல்வர் உதயநிதி கேட்டறிந்தார்.