திருவொற்றியூர்: திருவொற்றியூர் விம்கோ நகர் மார்க்கெட் அருகே ராமு (60) என்ற முதியவர் நோய்வாய்ப்பட்டு சாலையில் தவித்தார். சர்க்கரை நோயால் அவரது இடது கால் பாதிக்கப்பட்டிருந்தது. பல நாட்களாக ஒரே இடத்தில் படுத்திருந்த முதியவர் மழையிலும் நனைந்து சிரமப்பட்டார். இதை பார்த்த பொதுமக்கள் சென்னை மாநகர காவல் கரங்கள் மையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காவல் கரங்கள் தன்னார்வலர் வசந்தி தலைமையில் குழுவினர், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து முதலுதவி அளித்து, அவரை ஆட்டோவில் அழைத்து சென்று போரூரில் உள்ள முதியோர் காப்பகத்தில் அனுமதித்தனர்.