சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங். இவர் நேற்றிரவு வழக்கம் போல சாப்பிட்டு விட்டு தூங்கினார். இன்று அதிகாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தேவையான சிகிச்சையை மூத்த மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அளித்து வருகின்றனர்.
முதல்வரின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் மூத்த கண்காணிப்பாளர் மருத்துவர் ராகுல் ராவ் கூறுகையில், ‘வயிற்றில் தொற்று காரணமாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எடுக்கப்பட்ட அனைத்து பரிசோதனையும் இயல்பாகதான் இருக்கிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும், முதல்வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்துள்ளோம்’ என்றார்.