சென்னை: இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப பட்டியல் நேற்று காலை சென்னையில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை கலந்தாய்வு தொடங்கும் என நேற்று அறிவிக்கபப்ட்டிருந்த நிலையில் கலந்தாய்வுக்கான முழு விவரங்களையும் மாணவர் சேர்க்கை செயலாளர் அருணா அறிவித்துள்ளார். அதன்படி பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை துவங்குகிறது. நாளை காலை 10 மணி முதல் www.tnmedicalselection.org இணைய முகவரி வழியாக பொதுப்பிரிவில் இடம்பெற்றுள்ள 28,819 மாணவர்கள் விண்ணப்பிக்களாம் என கூறப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பகூடிய கல்லூரிகளின் பெயர்களை பதிவிடலாம். அரசு ஒதுக்கீட்டு இடைங்களை பொறுத்தவரையில் நீட் மதிப்பென் 720 முதல் 127 மதிப்பெண்கள் வரை இந்த இந்த கலந்தாய்வில் இடம்பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் நிர்வாக ஒதுக்கீடு இடங்களை பொறுத்தவரையில் 715 முதல் 127 மதிப்பெண்கள் வரையிலான 13,417 மாணவர்கள் முதல்சுற்று கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிகபட்டுள்ளனர். முதல்சுற்று கலந்தாய்வு 28-ம் தேதி மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் 29-ம் தேதி தற்காலிக முடிவுகள் வெளியிடப்படும் எனவும் 30-ம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் செப்டம்பர் 5-ம் தேதி வரை மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் நேரடி முறையில் சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது.