சென்னை: தமிழ்நாடு அரசு அறிக்கை: தமிழ் வளர்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிர்வாகப் பணிகள் சிறப்பாகவும் தொய்வின்றியும் எளிமையாகவும் மேற்கொள்ளும் வகையில் செய்தித் துறையில் உள்ளதை போன்றே தமிழ் வளர்ச்சித் துறையிலும் தமிழ் வளர்ச்சி இயக்குநரின்கீழ் ஏற்கனவே உள்ள திருநெல்வேலி மண்டலத்துடன் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை என 6 மண்டலங்களாக வகைப்படுத்தி, 6 துணை இயக்குநர்களை மண்டல அளவிலான பொறுப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிணங்க கடந்த 20ம் தேதி முதல் இதுபோன்று செயல்படுத்த தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், தமிழ் வளர்ச்சி இயக்குநரால் தொடர்ந்து நடத்தப்படும் ஆய்வு கூட்டங்களில் 6 மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களின் ஆட்சி மொழித்திட்ட செயலாக்கம் தொடர்பான விவரங்கள் மற்றும் அந்தந்த மாவட்டங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்ற அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.