சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு கருவூல அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஆர்.தமிழ் மொழி என்பவர் பேறுகால விடுப்பில் சென்றிருந்தார். பேறுகால விடுப்பு முடிந்து அடுத்த மாதம் பணியில் சேரவுள்ள நிலையில், அவரை மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மாற்றம் செய்து கருவூலத்துறை ஆணையர் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ் மொழி சார்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதிஷ்குமார், பேறுகால விடுப்பு முடிந்த பின்னரே பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம்- மயிலாடுதுறை பயண நேரம் 1 மணி நேரம் மட்டுமே ஆகும். அரசு பணிகளில் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படும்போது அதனை ரத்து செய்வதை உரிமையாக கோர முடியாது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.