தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் வழக்கில் இதுவரை 48 சாட்சியங்களிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது என சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.