Wednesday, February 28, 2024
Home » ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி வழங்கப்படும்: தாட்கோ மேலாண்மை இயக்குநர் அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி வழங்கப்படும்: தாட்கோ மேலாண்மை இயக்குநர் அறிவிப்பு

by Arun Kumar

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் உள்நாட்டு தொழிற்சாலைகளில் மற்றும் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி (CNC Turning Vertical Centre) வழங்கப்படவுள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி (CNC Operator. Turning Vertical Centre) NTTF நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் 15 நாட்கள் ஆகும். மேலும் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் ( SSC and NSDC Approval Certificate) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்

இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15000/- முதல் ரூ.20000/- வரை பெறலாம். மேலும் புகழ்பெற்ற தனியார் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்கள்

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi