சென்னை: மற்ற திட்டங்களுக்காக ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவது தவறானது என தமிழ்நாடு அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தவரின் நலன் மற்றும் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் அரசு உறுதியாக உள்ளது. ஒன்றிய, மாநில அரசின் திட்டங்களில் இவ்வாறே பட்டியல் இனத்தவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.