Wednesday, June 7, 2023
Home » ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் பயிற்சி: கலெக்டர் தகவல்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் பயிற்சி: கலெக்டர் தகவல்

by Arun Kumar
Published: Last Updated on

செங்கல்பட்டு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் பிஎஸ்சி (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு சேர்ந்து படித்திடவும், படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை தரமணியிலுள்ள institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது ISO 9001-2015 தர சான்று பெற்ற நிறுவனம். இந்நிறுவனமானது, ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. American Council of Business ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey 2022ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2வது இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் 13வது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.

இப்புகழ் பெற்ற நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு B.Sc (Hospitality & Hotel Administration மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு, ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப் படிப்பு மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் (Craftmanship Course in Food Production & Patisserie) படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், விமான நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும்.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். B.Sc (B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு பயில National Testing Agency மூலம் நடத்தப்படும் National Council For Hotel management Joint Entrance National Council For Hotel management Joint Entrance Examination (NCHM JEE)ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனத்தில் தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படும்.

(2023-2024ம் ஆண்டிற்கு National Testing Agency மூலம் நடத்தப்படும் NCHM JEE தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 27.4.2023. இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர், திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi